மலாயா புலி வகை அருகிவரும் உயிரினங்களில் ஒன்று. அவற்றைப் பார்ப்பது எளிதல்ல.
இந்நிலையில், தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள வனப்பகுதியில் அவ்வகையைச் சேர்ந்த புலி ஒன்று தென்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மலாயா புலிகள் ஆராய்ச்சியாளர்களின் கண்ணில் பட்டிருப்பது இதுவே இரண்டாவது முறை.
மலாயா புலி ஒன்றைக் காட்டும் காட்சிகள் வனவிலங்குக் கண்காணிப்புத் திட்டத்துக்காக வனப்பகுதியில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவானதாக தாய்லாந்தின் தி பேங்காக் போஸ்ட் நாளிதழ் ஞாயிற்றுக்கிழமை (மே 4) செய்தி வெளியிட்டது.
மலாயா புலி வகை தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள வனப்பகுதிகளிலும் மலேசிய வனப்பகுதிகளிலும் மட்டுமே காணப்படுகின்றன.

