வெள்ள நீர் அதிகரிப்பு; 125 முதலைகளை கொன்ற பண்ணை

1 mins read
5c0abc4f-a2dd-4108-ba24-97bb9b365ac7
பாதுகாப்புக் காரணங்கள் கருதி 125 முதலைகள் கொல்லப்பட்டன - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தில் செயல்படும் முதலைப் பண்ணை ஒன்று பாதுகாப்புக் காரணங்களுக்காக 125 முதலைகளை கொன்றுள்ளது.

தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் கனத்த மழை பெய்து வருகிறது. அதனால் அங்கு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

லம்ப்ஹன் மாநிலத்திலும் நிலைமை மோசமாக உள்ளது. இந்நிலையில், அவ்வட்டாரத்தில் உள்ள நத்தபக் கும்கட் முதலைப் பண்ணையில் முதலைகள் இருந்த இடத்தில் நீரின் அளவு அதிகமானது.

நீரிலிருந்து முதலைகள் தப்பித்து பண்ணையைவிட்டு வெளியே செல்லக்கூடும், அது மனிதர்களுக்கும் மற்ற கால்நடைகளுக்கும் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 125 முதலைகள் கொல்லப்பட்டன என்று பண்ணையின் உரிமையாளர் தெரிவித்தார்.

17 ஆண்டுகளாக தாம் அந்த முதலைகளை வளர்த்து வந்ததாக உரிமையாளர் வருத்தத்துடன் செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்