வெளிநாட்டு முதலீடுகள்: கட்டுப்பாடுகளை நீக்கியது சீனா

2 mins read
4aca16f6-804c-4559-b411-e43e48a3d62b
சீனாவின் ஷாங்காய் நகர ஆறு. - படம்: சீன ஊடகம்

சீனா வெளிநாட்டு முதலீடுகளை நிலைப்படுத்த புதிய திட்டம் ஒன்றை திங்கட்கிழமை (பிப்ரவரி 10ஆம் தேதி) அறிவித்தது.

உலகில் தன்னைப்பேணித்தனம் அதிகரித்து வரும் நிலையில், முதலீடுகளை பேரளவில் ஈர்க்கும் வண்ணம் சீனா தன்னை திறந்த பொருளியலாகக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தத் திட்டத்தைப் பிரதமர் லி சியாங்கின் தலைமையில் கூடிய அந்நாட்டு நிர்வாக மன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. சீனாவில் வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்ட வர்த்தகங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, ஏற்றுமதியை நிலைப்படுத்துவது, தொழில்துறையை மேம்படுத்துவது ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால், தற்போதுள்ள முதலீடுகள், புதிய முதலீடுகள் ஆகியவற்றை ஈர்க்க சீனா முனைப்புக் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

அதன் முதல்படியாக உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சந்திக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மற்ற துறைகளில் உள்ள கட்டுப்பாடுகளையும் நீக்கப் புதிய திட்டம் வகை செய்கிறது.

சீனா தனது சந்தைகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதை ஊக்குவிக்கிறது. அத்துடன், அதன் பங்கு முதலீட்டுத் துறையிலும் துடிப்புடன் பங்கேற்குமாறு அவற்றை வரவேற்றுள்ளது.

இதற்கிடையே, வெளிநாட்டு முதலீடுகள், சீன நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடனான இணைப்பு, பங்கு முதலீடுகள் ஆகியவை அதிகப் பலன் அளிக்கும் வகையில் தனது விதிமுறைகளை நெறிமுறைப்படுத்துவதும் திட்டத்தில் அடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சீன அரசிடமிருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பொருள்கள் அதைப் பெறும் சீன நிறுவனங்கள் போலவே நடத்தப்படும் என்று திட்டம் வகுத்துள்ளது.

மேலும் முக்கிய துறைகளான தொலைத்தொடர்பு, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி போன்றவற்றில், குறிப்பாக அவற்றில் புதிய திட்டங்களை வேகமாக அறிமுகப்படுத்தும் நோக்கில், சீனா சேவைத் துறையையும் திறந்துவிடும் என்று ளகூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்