தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா மறுசீரமைப்புக்கு முன்னாள் பிரிட்டன் பிரதமர் பொறுப்பேற்கலாம்

2 mins read
db8a2861-9681-4bea-bf03-647a35f141f0
திரு பிளேர் 1997ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டுவரை பிரிட்டன் பிரதமராக இருந்தார். - படம்: நியூயார்க் டைம்ஸ்

நியூயார்க்: போரால் சிதைந்துள்ள காஸாவை மறுசீரமைப்பு செய்யும் பொறுப்பு பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரிடம் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

திங்கட்கிழமை (செப்டம்பர் 29) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் காஸா போர் நிறுத்த உடன்பாடு குறித்து பேசினர். அதில் 72 வயது டோனி பிளேர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிபர் டிரம்ப் மற்றும் நெட்டன்யாகுவின் உடன்பாடுகளை ஹமாஸ் ஒப்புக்கொண்டால் திரு பிளேரின் பங்கு பெரிதாகப் பார்க்கப்படும்.

காஸா அனைத்துலக இடைக்கால அமைப்பு பிளேர் தலைமையில் அமைக்கப்பட்டால் அதில் பல நாடுகள் உதவிக்கரம் நீட்டக்கூடும். இதனால் காஸா மீண்டும் புத்துயிர் பெறலாம்.

இந்நிலையில், திரு பிளேர் அதிபர் டிரம்ப் மற்றும் நெட்டன்யாகுவின் உடன்பாடுகளை வரவேற்றுள்ளார். அது துணிச்சலான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இரண்டு ஆண்டுகளாக நடக்கும் போரையும் துக்கத்தையும் முடிவுக்குக் கொண்டுவர இது ஒரு நல்ல வாய்ப்பு,” என்று பிளேர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.

திரு பிளேர் 1997ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு[Ϟ]வரை பிரிட்டன் பிரதமராக இருந்தார்.

திரு பிளேர் பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் அவர் அதிகக் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் எட்டு ஆண்டுகள் அமெரிக்கா, ஐக்கிய நாட்டு நிறுவனம், ஐரோப்பிய ஒன்றிய, ர‌ஷ்யா இடம்பெற்றுள்ள அரசதந்திர அமைப்பின் உயரதிகாரியாக இருந்தார். அந்த அமைப்பு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் அமைதியைக் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்டது.

திரு பிளேருக்கும் ஐக்கிய அரபு சிற்றரசுகள் உள்ளிட்ட அரபு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நல்ல உறவு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்