ஜப்பானுக்கான அமெரிக்கத் தூதராக ஜார்ஜ் கிளாஸ்

1 mins read
cba01967-0fc1-4236-830e-258684b9e125
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனால்ட் டிரம்ப், திரு ஜார்ஜ் கிளாஸை ஜப்பான் தூதராக அறிவித்துள்ளார். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப், திரு ஜார்ஜ் கிளாஸை ஜப்பான் தூதராக அறிவித்துள்ளார். நட்பு நாட்டுக்கான இந்த முக்கிய பதவி, சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்குவதாகத் தெரிகிறது.

“ஒரு முதலீட்டு வங்கியின் முன்னாள் தலைவர் என்ற முறையில், ஜார்ஜ் தனது வியாபாரத் திறனை தூதரக பதவிக்கு கொண்டுவருவார்,” என்று டிரம்ப் தனது சமூக வலைத்தள பதிவில் கூறினார்.

சொத்துச் சந்தைத் துறையிலும் பணியாற்றியுள்ள திரு. கிளாஸ், டிரம்ப் முதல் முறை அதிபராக பதவி வகித்தபோது போர்ச்சுகல் நாட்டிற்கான அமெரிக்க தூதராக இருந்தார்.

அத்துடன் டொமினிக்கன் குடியரசுக்கான தூதராக நீண்டகால மத்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரியும் வெளியுறவு அமைச்சின் நாடாளுமன்றக் குழு உறுப்பினருமான லியா ஃபிரான்சிஸ் காம்போஸை நியமிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்தார்.

திருவாட்டி காம்போஸ், ஃபாக்ஸ் செய்தி தொகுப்பாளர் ரேச்சல் கேம்போஸ்-டஃபியின் சகோதரி. டிரம்பின் போக்குவரத்து அமைச்சருக்கான தேர்வாக ‘ரியல் வேர்ல்ட்’ அலும் ‘சோன் டஃபியை மணந்துள்ளார்.

லக்சம்பர்க், ஆஸ்திரியா நாடுகளுக்கான தூதர்களையும் அறிவித்துள்ள டிரம்ப், முக்கிய நாடுகளுக்கான தூதர்களை அறிவித்துள்ளார். ஜப்பான் போன்ற நட்பு நாடுகளையும் பாதிக்கக்கூடிய புதிய வரிகளுடன் அமெரிக்க உறவுகளை உருமாற்ற உறுதியளித்துள்ளார்.

போர்ச்சுகல் நாட்டுக்கான தூதர் திரு. கிளாஸ் அவர்கள், அந்நாட்டில் சீன முதலீடுகள் குறித்து விமர்சித்தார்.

குறிப்புச் சொற்கள்