சிறார்களுக்கு சமூக ஊடகத் தடையை அமலாக்கியது கிரீஸ்

சிறார்களுக்கு சமூக ஊடகத் தடையை அமலாக்கியது கிரீஸ்

படம்: ராய்ட்டர்ஸ்

23 Oct 2026 - 7:26 pm

1 mins read

ஏதன்ஸ்: கிரீஸ் நாடாளுமன்றம், 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான தடையை அமலாக்கியது.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) நாடாளுமன்றத்தில் அதற்கான மசோதா விவாதிக்கப்பட்டுப் பிறகு அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அச்சட்டம் அமலுக்கு வரும். சிறுவர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு குறித்து அதிகரித்துவரும் கவலையால் அந்நாட்டில் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறார்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த இதுபோன்ற சட்டத்தை ஆஸ்திரேலியாதான் 2025ல் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது.

இருப்பினும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் அரசமைப்புச் சபை அந்நாடு கொண்டுவந்த சிறார் சமூக ஊடகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை நிராகரித்தது.

சிறார்களின் வயதைச் சரிபார்த்து அவர்களது உரிமையைப் பாதுகாக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து செயல்பட, சமூக ஊடகத் தளங்களுக்கு இரண்டரை மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஆணையத்திடம் சிறார்களின் வயதைச் சரிபார்ப்பதற்கான தீர்வை நாடியுள்ள ஏழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் கிரீசும் ஒன்றாகும்.

தூக்கமின்றி சமூக ஊடகத் தளங்களை நண்பர்களுடன் கூடி, முடிவில்லாமல் சொடுக்கிக்கொண்டே நேரத்தையும் கவனத்தையும் சீரழிக்கும் சிறார்களைக் கட்டுப்படுத்தப் பாடுபடும் பெற்றோருக்கு உதவிட கிரீஸ் அவர்களின் பக்கம் நிற்பதாகக் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்