மலேசியாவுக்கு வலசை வந்துபோகும் பறவைகளைப் பாதிக்கும் புகைமூட்டம்

மலேசியாவுக்கு வலசை வந்துபோகும் பறவைகளைப் பாதிக்கும் புகைமூட்டம்

படம்: ஏஎஃப்பி

22 Sep 2026 - 5:59 pm

1 mins read

ஜோகூர்பாரு: தென்கிழக்காசிய வட்டாரத்தைச் சூழ்ந்துள்ள புகைமூட்டம், மலேசியாவுக்கு வலசை போகும் பறவை இனங்களையும் பாதித்து அவற்றின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று மலேசிய இயற்கைச் சங்கத்தின் ஜோகூர் மாநில ஆலோசகர் வின்சன்ட் சாவ் திங்கட்கிழமை (செப்டம்பர் 21) அச்சம் தெரிவித்தார்.

பறவைகளின் கண்பார்வை புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டு, அவை பாதைகளைச் சரியாகக் கடந்து பயணம் வருவதைத் தடை செய்து கூடுதல் இடங்களில் அவற்றை நிறுத்தச் செய்யும்.

வலசை வரும் பறவைகள் இருவகையாகப் பிரிக்கப்படும். உள்நாட்டுப் பறவைகள் அங்குள்ள காட்டுப்பகுதிகளுக்கு இடையே பறந்து ஓரிடம் விட்டு மற்றொரு இடத்துக்குப் பறப்பவை. கடற்கரைகளைப் பயணத்தின்போது பின்தொடர்ந்து குறிப்பிட்ட இடங்களை வந்தடைபவை மற்றொரு வகைப் பறவையினங்கள்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் கிழக்காசியா-ஆஸ்திரலேசியா ஆகாயப்பாதையில் வலசை சென்று வருபவையாகும். பனிக்காலத்தைத் தவிர்க்க அவை வடக்கிலிருந்து கிழக்கு வரை வந்து பிறகு மீண்டும் வடக்குப் பகுதிக்குச் சென்றுவிடுகின்றன என்று திரு வின்சன்ட் கூறினார். அவை பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் கிழக்குநோக்கி நியூசிலாந்து வரை பறந்து செல்பவை என்றார் அவர்.

நியூசிலாந்தில் முட்டையிட்டு, குஞ்சுகள் வெளிவரும்வரை அடைகாத்து அங்கேயே அவை தங்கிவிடுகின்றன. பிறகு வசந்தகாலம் மலர்ந்ததும் அவற்றின் குஞ்சுகளுடன் அப்பறவைகள் வடக்கு நோக்கி பறந்து செல்கின்றன.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகோலாலம்பூர்பறவைஇயற்கைசங்கம்ஜோகூர் பாருஜோகூர்ஆலோசகர்புகைமூட்டம்காற்றுத்தரம்ஆரோக்கியம்