தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிலாவில் வெப்ப அலை; பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல்

1 mins read
b07159d4-7e4e-4f94-9dcb-3f07b475b0ca
மணிலாவில் மார்ச் 3 ஆம் தேதி கடும் வெப்பம் காரணமாக நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டதால், மாணவர்கள் தங்கள் பள்ளியை விட்டு வெளியேறினர். - படம்: ஏஎஃப்பி

மணிலா: பிலிப்பீன்சில் கடுமையான வறண்ட வானிலை நிலவுகிறது. வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அந்நாட்டுத் தலைநகர் மணிலாவில் இயங்கும் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகள் திங்கட்கிழமை (மார்ச் 3) மூடப்பட்டன.

மணிலாவிலும் அதன் அருகே இருக்கும் வேறு இரு நகரங்களிலும் காற்றின் வெப்பநிலை, ஈரப்பத அளவீடான வெப்பக் குறியீடு ஆபத்தான அளவை எட்டும் என அந்நாட்டு தேசிய வானிலை நிலையம் எச்சரித்துள்ளது.

இந்த வெப்பச் சலனத்தால் நீர்ச்சத்துக் குறைபாடு, வெப்பத் தாக்குதல் போன்றவை மக்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும் நிலையம் கூறியுள்ளது.

அதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போர் பகல் பொழுதில் நீண்ட நேரம் வெளியில் இருப்பதைத் தவிர்க்குமாறு அது தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பிலிப்பீன்சின் பெரும்பகுதிகளில் வெப்ப அலை வீசியது. மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகளுக்காக வருவது தவிர்க்கப்பட்டது. இதனால் மில்லியன் கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி, மணிலாவில் 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

குறிப்புச் சொற்கள்