தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீடுகளுக்கு வந்த அஞ்சல்கள் திருட்டு; வெளிநாட்டில் இந்திய வம்சாவளியினர் எண்மர் கைது

1 mins read
b2e5480a-197c-4a80-a19c-a50c80388b87
கைதானவர்கள் மொத்தம் 344 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். - படம்: ஊடகம்

ஒட்டாவா: கடனட்டை, காசோலை உள்ளிட்டவை இருந்த அஞ்சல்களைத் திருடியதாக இந்திய வம்சாவளியினர் எட்டுப் பேரைக் கனடியக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

அவர்கள்மீது 300க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்றும் அவர்களில் சிலர் நாடுகடத்தப்படலாம் என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

ஆன்டாரியோ மாநிலத்தின் பீல் நகரக் காவல்துறையினர் திருடப்பட்ட 450க்கும் மேற்பட்ட அஞ்சல்களை மீட்டனர். அவற்றில் கடனட்டைகளும் 400,000 கனடிய டாலர் (S$375,380) மதிப்புடைய காசோலைகளும் அடங்கும் என்று ‘சிடிவி நியூஸ்’ தெரிவித்துள்ளது.

வீடுகளுக்கான அஞ்சல் பெட்டிகளைக் குறிவைத்து ஒரு கும்பல் செயல்பட்டு வந்தது விசாரணை மூலம் கண்டறியப்பட்டதாகப் பீல் நகரக் காவல்துறை கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) அறிக்கை வெளியிட்டது.

முன்னதாக, அஞ்சல்கள் களவுபோவதைக் கண்டுபிடிப்பதற்காகக் கடந்த ஏப்ரல் மாதம் ‘புராஜெக்ட் அண்டெலிவரபிள்’ எனும் கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

திருடப்பட்டவற்றில் 255 காசோலைகள், 182 கடனட்டைகள், 32 அரசாங்க அடையாள அட்டைகள், 20 பரிசு அட்டைகள் உள்ளிட்ட 465 அஞ்சல்கள் மீட்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

அவற்றின் தொடர்பில் சுமன்பிரீத் சிங், குர்தீப் சத்தா, ஜஷன்தீப் ஜத்தானா, ஹர்மான் சிங், ஜஷன்பிரீத் சிங், மன்ரூப் சிங், ராஜ்பீர் சிங், உபிந்தர்ஜித் சிங் ஆகிய எட்டுப் பேர் பிடிபட்டனர்.

அந்த எண்மரும் 21 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்கள். ஒட்டுமொத்தத்தில் அவர்கள்மீது 344 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் சிலரை நாடுகடத்துவது குறித்து காவல்துறை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்