ஹாங்காங்கில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து செங் யன்சியொங் என்ற இயக்குநருக்குப் பதிலாக சாவ் ஜி என்ற உயர் அதிகாரியை சீனா நியமித்துள்ளது. அவர் நகர விவகாரங்களின் உயர் நிர்வாக அலுவலகத்தின் உதவி இயக்குநர்.
மாநில மன்றம், சீனாவின் அமைச்சரவை வெள்ளிக்கிழமை (மே 30), ஹாங்காங், மக்காவ் விவகார நிர்வாக அலுவலகத்தின் துணை இயக்குநர், நகரில் உள்ள மத்திய அரசாங்கத் தொடர்பு தலைவராக நியமிக்கப்பட்டதை அறிவித்தது.
61 வயது திரு செங், தொடர்பு அலுவலக இயக்குநர், ஹாங்காங், மக்காவ் விவகாரங்கள் அலுவலக துணை இயக்குநர், நகரின் தேசியப் பாதுகாப்புக் குழுவின் ஆலோசகர் ஆகிய மூன்று பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டதை அறிக்கை குறிப்பிட்டது.
ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி ஜோன் லீ கா-சியூ திரு சாவ்வை வரவேற்று ஹாங்காங்கிற்கு அவர் வழங்கிய ஆதரவுக்கு திரு செங்கிற்கு நன்றி கூறினார்.
2023ஆம் ஆண்டு ஹாங்காங், மக்காவ் விவகாரங்களின் நிர்வாக அலுவலகத் துணை இயக்குநராக சாவ் நியமிக்கப்பட்டார். ஹாங்காங்கின் தேசியப் பாதுகாப்பைக் கட்டிக்காக்கும் குழுவில் உள்ள செங்கின் பதவியையும் சாவ் நிர்வகிப்பார்.

