சீனாவுக்குச் செல்லும் சுற்றுப்பயணிகள் அதிகரிப்பு

சீனாவுக்குச் செல்லும் சுற்றுப்பயணிகள் அதிகரிப்பு

1 mins read
9efeb3f0-fc22-4a18-8300-2646c99c9b9b
சீனாவின் விசா இல்லாத அனுமதியால் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. - கோப்புப்படம்: அன்ஸ்பிளாஷ்

பெய்ஜிங்: சீனாவுக்குச் செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் காலாண்டில் வெகுவாக அதிகரித்துள்ளது.

விசா இல்லாத பயணத்திற்கு அனுமதியளிக்கும் கொள்கைகளாலும் எல்லையைக் கடந்து செல்வதற்கான வசதிகளைப் பெருக்கியதாலும் சுற்றுப்பயணிகள் அதிகரிப்பதற்கான முக்கியக் காரணம் என்று தேசியக் குடிநுழைவு நிர்வாகம் சனிக்கிழமை (ஏப்ரல் 10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அந்நாட்டின் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் முதல் காலாண்டில் ஏறக்குறைய 185 மில்லியன் நுழைவுகளையும் வெளியேற்றங்களையும் பதிவு செய்துள்ளனர். இது, ஆண்டு அடிப்படையில் 13.5 விழுக்காடு அதிகம் என்று குடிநுழைவுத் துறையின் பேச்சாளரான லியூ நிங் தெரிவித்தார்.

அவற்றில் வெளிநாட்டவர்கள் சுமார் 21.33 மில்லியன் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். முந்தைய ஆண்டைவிட, அது 22.3 விழுக்காடு அதிகம்.

ஏறக்குறைய 8.32 மில்லியன் வெளிநாட்டவர்கள் விசா இன்றி சீனாவுக்குச் சென்றிருந்தனர். ஆண்டு அடிப்படையில், அது 29.3 விழுக்காடு உயர்வாகும். சீனாவின் அனைத்து வெளிநாட்டு வருகையாளர்களில், 77.9 விழுக்காட்டினர் விசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைந்தனர்.

சீனாவில் குடியிருப்பாளர்களின் நுழைவு, வெளியேற்றம் ஏறக்குறைய 91.67 மில்லியனை எட்டியுள்ளது. இது, ஆண்டு அடிப்படையில் 14.2 விழுக்காடு அதிகம். அதே நேரத்தில், ஹாங்காங், மக்காவ் மற்றும் தைவானைச் சேர்ந்த குடியிருப்பாளர்களின் மொத்தப் பயண எண்ணிக்கை 10.3 விழுக்காடு கூடி, கிட்டத்தட்ட 72.5 மில்லியனாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்