‘பாதிக்கப்படக்கூடிய’ குழுக்களுக்கான அத்தியாவசியப் பொருள்கள் அதிகரிப்பு

‘பாதிக்கப்படக்கூடிய’ குழுக்களுக்கான அத்தியாவசியப் பொருள்கள் அதிகரிப்பு

1 mins read
936f6838-74d9-4820-818f-6453733576c7
விவசாயிகள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்கள், மின்சார வாகனங்களை வாங்க அல்லது சூரிய மின்சக்தித் தகடுகளை நிறுவ விரும்பும் மக்கள் ஆகியோரும் சலுகை வட்டி விகிதக் கடன்களால் பயனடைய முடியும். - கோப்புப் படம்: போர்ஜன் சஞ்சிகை

பேங்காக்: மத்திய கிழக்குப் போரின் பொருளியல் தாக்கங்களைக் குறைக்க உதவும் வகையில், தாய்லாந்து ஏப்ரல் 13ஆம் தேதிமுதல் அத்தியாவசியப் பொருள்களுக்கான தனது உதவித்தொகையை அதிகரிக்க உள்ளது.

இந்தத் தாக்கங்கள், குறிப்பாக விவசாயிகள், சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் ‘பாதிக்கப்படக்கூடிய’ மக்களைப் பாதிக்கின்றன.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் சமூக நலன்களைப் பெறத் தகுதியளிக்கும் அட்டையை வைத்திருக்கும் 13 மில்லியனுக்கும் அதிகமான தாய்லாந்து மக்களின் அன்றாடச் செலவுகளுக்கான மாதாந்தர உதவித்தொகை 300 பாட்டிலிருந்து (S$12) 400 பாட்டாக அதிகரிக்கப்படும் என்று நிதி அமைச்சு, சனிக்கிழமை (ஏப்ரல் 11) நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது.

‘பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதையும், இந்த நிலைமை மற்றத் துறைகளுக்குப் பரவுவதைத் தடுப்பதையும்’ நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நிதி அமைச்சர் எக்னிதி நித்திதன்பிரபாஸ் கூறினார்.

விவசாயிகள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்கள், மின்சார வாகனங்களை வாங்க அல்லது சூரிய மின்சக்தித் தகடுகளை நிறுவ விரும்பும் மக்கள் ஆகியோரும் சலுகை வட்டி விகிதக் கடன்களால் பயனடைய முடியும்.

‘சொங்க்ரான்’ எனப்படும் தாய்லாந்துப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாகப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

“இந்த சவால் நீண்டகாலத்திற்கு நீடிக்கும். எனவே, நாங்கள் குறுகியகால நடவடிக்கைகளை மட்டும் செயல்படுத்தாமல், சாத்தியமான அதிக எரிசக்தி மற்றும் உற்பத்திப் பொருள்களின் விலைகளுக்கு ஏற்ப பொதுமக்களையும் தொழில்முனைவர்களையும் தயார்ப்படுத்தி வருகிறோம்,” என்று திரு எக்னிட்டி மேலும் கூறியதாக எஏஃப்பி செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்