தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐரோப்பிய வல்லரசுகளை எச்சரித்த ஈரான்

1 mins read
https://www.straitstimes.com/world/europe/iran-warns-of-retaliation-if-europeans-exploit-un-nuclear-report
8e042fd1-ce29-423a-8080-4f05d50a70f5
ஈரானிடம் உள்ள யுரேனியத்தின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட 45 மடங்கு அதிகமாக இருப்பதாக அனைத்துலக அணுச்சக்தி ஆணையத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. - படம்: நியூயார்க் டைம்ஸ்

தெஹ்ரான் - ஐரோப்பிய வல்லரசுகள் அணுவாயுத தடைகள் விதிக்கப்போவதாக விடுத்த மிரட்டல் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அறிக்கையை மீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

அனைத்துலக அணுசக்தி ஆணையம், யுரேனியத்தின் இருப்பை ஈரான் 60 விழுக்காடு வரை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்தது. அணுவாயுதங்களைச் செய்ய தேவைப்படும் 90 விழுக்காட்டை அது நெருங்கிவிட்டதாக அறிக்கை சொன்னது.

உலக வல்லரசுகளுடன் 2015ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க உடன்பாட்டில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஈரானிடம் மொத்தமாக இருக்கும் மெருகேற்றப்பட்ட யுரேனியத்தின் அளவு தற்போது 45 மடங்கு அதிகமாக இருப்பதாக அறிக்கை சுட்டியது.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றைச் சுட்டி, 2015ஆம் ஆண்டு செய்த உடன்பாட்டை மீறி ஐரோப்பியத் தரப்புகள் தகாத நடவடிக்கை எடுத்தால் ஈரான் பதிலடி கொடுக்கும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி அமைப்பின் தலைவரிடம் தொலைபேசியில் கூறினார்.

ஈரானின் அணுவாயுதத் திட்டம் ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தலாக அமைந்தால் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் வர்த்தகத் தடைகளை விதிக்கக்கூடும் என்று எச்சரித்தன.

ஐரோப்பியத் தரப்புகள் உடன்பாட்டை மீறுவதை நிறுத்திக்கொள்ளும்படி திரு அராக்சி அறிவுறுத்தினார்.

அனைத்துலக அணுசக்தி ஆணையம், வியன்னாவில் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் காலாண்டு கூட்டத்தில் ஈரானின் அணுவாயுத நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யவிருக்கிறது.

ஆணையத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது. அணுவாயுதங்கள் தயாரிப்பதாகக் கூறுவதைப் புறக்கணித்த ஈரான், சிவிலிய எரிசக்தி உற்பத்திக்கு யுரேனியம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்