‘ஜேம்ஸ் பாண்ட் 007’ கதாபாத்திரத்தின் புதுமுகம்: பிரிட்டனின் ராபர்ட் பெட்டின்சன்

‘ஜேம்ஸ் பாண்ட் 007’ கதாபாத்திரத்தின் புதுமுகம்: பிரிட்டனின் ராபர்ட் பெட்டின்சன்

1 of 2
படம்: 007/INSTAGRAM
படம்: ராய்ட்டர்ஸ்

17 Nov 2026 - 7:14 pm

2 mins read

ஆங்கிலத் திரைப்பட ரசிகர்கள் மிக ஆர்வமாகக் காணவிரும்பும் கதைக் களத்தில் ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ தொடர்கள் பெரும்புகழ்பெற்றவை.

அயென் ப்ளெமிங் எனும் பிரிட்டிஷ் எழுத்தாளர் முதன்முதலில் 1952ஆம் ஆண்டில் அத்தொடரின் கற்பனைக் கதைகளை எழுதத்தொடங்கினார். அன்றுமுதல் அந்தக் கதாபாத்திரத்தின் பெயரில் பல திரைப்படங்கள், சிறுகதைகள், கேலிச்சித்திரங்கள், வீடியோ விளையாட்டுகள் என பற்பல வடிவங்களில் அக்கதை விரிவடைந்தது.

பிரிட்டனின் தைரியம் மிக்க உளவுத் துறை அதிகாரியை நாயகனாகக் கொண்ட அக்கதைத்தொடர் உலக அளவில் பல வசூல் சாதனைகளைப் படைத்துள்ளது. அதனால்தான் அப்பாத்திரத்தில் நடிப்போர்கள் வெகு விரைவில் புகழின் உச்சத்தை எட்டுகின்றனர்.

அந்த வரிசையில் பல ஆண்டுகளாக அதில் நாயகனாக நடித்துவந்த டேனியல் கிரேக்குக்குப் பிறகு யார் அந்தப் பாத்திரத்தை ஏற்பார் என்ற கேள்வி நிலவிவந்தது.

அதற்கு விடையளிக்கும் விதமாக அத்தொடரின் தயாரிப்பாளர்களான எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் ராபர்ட் பெட்டின்சன் என்பவரை திங்கட்கிழமை (நவம்பர் 16) புதிய ‘ஜேம்ஸ் பாண்ட் ஏஜண்ட் 007’ கதாபாத்திரமாக சமூக ஊடகத்தில் அறிமுகம் செய்துவைத்தது.

அவர் ஏற்கெனவே டுவைலட், பேட்மேன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

அக்கதாபாத்திரத்தில் தோன்றும் ஏழாம் நடிகராக விளங்குவதில் 40 வயதான ராபர்ட் பெட்டின்சன் பெருமைகொள்கிறார். அவரைக் கொண்டு 26வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் 2028ஆம் ஆண்டில் வெளிவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

லண்டன் நகரில் வாழும் ராபர்ட், “சினிமா உலகில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற கதாபாத்திரைத்தை ஏற்றுநடிப்பதை எனது வாழ்நாளில் கிடைத்த பெரும் கௌரவமாகக் கருதுகிறேன்,” என்று கூறி நெகிழ்ந்தார்.

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை டெனிஸ் வில்நெவ் இயக்க, ஸ்டீவன் நைட் எழுத்துவடிவமைக்கிறார். படத்தின் தலைப்பும் எப்போது வெளியிடப்படும் என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை.

எட்டாத கனவு நினைவானதுபோல் உணரும் தம்மீது வைக்கப்பட்ட நம்பிக்கை குறித்து ஆழ்ந்த நன்றியை படக்குழுவுக்கு ரார்ட் பெட்டின்சன் தெரிவித்துக்கொண்டதோடு, மிகத்திறமை வாய்ந்த அக்குழுவுடன் பணியாற்ற ஆவலாக உள்ளதையும் பகிர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்