மலேசிய வான் பாதுகாப்புக்கு ஜப்பானியத் தொழில்நுட்பம்: 43 மி. ரிங்கிட் முதலீடு

மலேசிய வான் பாதுகாப்புக்கு ஜப்பானியத் தொழில்நுட்பம்: 43 மி. ரிங்கிட் முதலீடு

படம்: https://www.freemalaysiatoday.com/

24 Oct 2026 - 6:03 pm

1 mins read

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் வான்வெளி பாதுகாப்புக்கு உதவ ஜப்பான் அதன் தொழில்நுட்பத்தை வழங்கவுள்ளது.

மலேசிய அரசக் கப்பல் படைக்கு ஜப்பான், ஆளில்லா வானூர்திகளுக்கு எதிரான கட்டமைப்புகளை வடிவமைக்கும். அதன் மதிப்பு 43 மில்லியன் ரிங்கிட் (S$13.45 மில்லியன்) என்று அறியப்படுகிறது.

அந்தத் தற்காப்புக் கட்டமைப்புகள் சபா மாநிலத்தின் லாபுவான், செபங்கார் உட்பட்ட மலேசியாவின் பல இடங்களில் நிறுவப்படும் என்று தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்ததாக மலேசிய பெரித்தா ஹரியான் ஊடகம் சனிக்கிழமை (அக்டோபர் 24) செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளில்லா வானூர்திக் தாக்குதல்களில் இருந்து மலேசியாவைத் தற்காத்துக்கொள்ளும் நோக்கத்தில் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

மலேசியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள அதிகாரபூர்வப் பாதுகாப்பு உதவித் திட்டத்தின் அங்கமாக இது அமையும். கடந்த 2023ஆம் ஆண்டுமுதல் இந்த இருநாட்டு உடன்படிக்கை நடப்பில் உள்ளது.

மலேசிய கடற்படைக்கு வழங்கப்படும் இந்தத் தற்காப்புக் கட்டமைப்புத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி திரு காலிட்டும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் டொஷிமிட்சு மொடெகியும் கையெழுத்திட்டனர்.

அதன் உத்திப்பூர்வ பங்காளியான மலேசியாவுக்கு ஜப்பான் முதன்முறையாக இத்தகைய தற்காப்புக்கான தளவாட உதவியை வழங்க முன்வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
சீனாமலேசியாஜப்பான்தென்சீனக் கடல்ராணுவம்தற்காப்புஆயுதம்ஆளில்லா வானூர்திஅமைச்சர்வெளியுறவுமுழுமைத் தற்காப்பு