புக்கெட் நிலச்சரிவில் குறைந்தது 10 பேர் சிக்கி மாண்டனர்

1 mins read
54c1ee94-23a6-4394-b0e4-815603098776
புக்கெட்டில் இரவு தொடங்கிய கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. - படம்: இபிஏ

பேங்காக்: சுற்றுப்பயணிகள் அதிகம் நாடிச் செல்லும் தாய்லாந்தின் புக்கெட் நகரம் கனமழையாலும் நிலச்சரிவுகளாலும் வதைக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளைச் சேர்ந்த எண்மர் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் ஆகஸ்ட் 24ஆம் தேதி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தம்பதி, மியன்மாரைச் சேர்ந்த ஆறு ஊழியர்கள், தாய்லாந்து நாட்டவர் இருவர் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டதாக பேங்காக் போஸ்ட் தெரிவித்தது.

தீவு முழுவதும் பல இடங்களில் பெய்த கனத்த மழையால் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுச் சம்பவங்களும் ஏற்பட்டதாக பேரிடர் தடுப்பு, தணிப்புப் பிரிவின் அரசாங்க அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வில்லா வீடு, வெளிநாட்டு ஊழியர் முகாம் உட்பட பல இடங்கள் பேரளவில் ஏற்பட்ட நிலச்சரிவு ஒன்றால் புதைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, உயர் அபாயமுள்ள இடங்களைத் தவிர்க்குமாறு சுற்றுப்பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சகதியில் சிலர் சிக்கியுள்ளதாக நம்பப்படும் நான்கு வெவ்வேறு இடங்களில் மீட்புப் படையினர் மும்முரமாகத் தேடுதல் பணியை மேற்கொண்டு வருவதாக அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்