படகு கவிழ்ந்ததில் குறைந்தது எட்டுப் பேர் மரணம்

படகு கவிழ்ந்ததில் குறைந்தது எட்டுப் பேர் மரணம்

படங்கள்: டேரல் கனில்லோ/ஃபேஸ்புக்

26 Jan 2026 - 11:51 am

1 mins read

மணிலா: தென் பிலிப்பீன்சில் ஏறத்தாழ 342 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது எட்டுப் பேர் மாண்டுவிட்டதாக பசிலான் மாநிலத்தின் மேயர் அர்சினா லஜா கஹிங் நானோ ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

இச்சம்பவம் திங்கட்கிழமை (ஜனவரி 26 ) காலை நிகழ்ந்தது.

இதுவரை குறைந்தது 138 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனைகளில் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதால் நிலைமையைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸாம்போவாங்க நகரிலிருந்து ஜோலோ தீவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது படகு கவிழ்ந்தது.

தேடுதல், மீட்புப் பணிகளில் பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல் படையும் ஈடுபட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
பிலிப்பீன்ஸ்படகுமரணம்மீட்பு