ஓய்வெடுக்கும்படி மலேசிய மாமன்னருக்கு ஆலோசனை

ஓய்வெடுக்கும்படி மலேசிய மாமன்னருக்கு ஆலோசனை

1 mins read
319e9b18-ee86-483d-b031-c9a1d5fa63a6
பிரதமர் அன்வார் இப்ராகிமும் மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தரும் (வலது) பிப்ரவரி 24ஆம் தேதி மத்திய நிர்வாக விவகாரங்கள் குறித்து பேசுகின்றனர். - படம்: ஃபேஸ்புக்/சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர்

கோலாலம்பூர்: மலேசிய மாமன்னருக்கு ஏற்பட்ட தசை-எலும்பு வலியைத் தொடர்ந்து, ஓய்வெடுத்து, சிகிச்சை மேற்கொள்ளுமாறு அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மலேசிய அரண்மனை அந்தத் தகவலை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்தது.

மாமன்னர் அதிகாரபூர்வ கூட்டங்களில் கலந்துகொள்ளமாட்டார்.

“அதன் காரணமாக, பிரதமர், அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகள் ஆகியோருடன் இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற நோன்பு துறக்கும் நிகழ்வில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை,” என்று மாளிகையின் அறிக்கை தெரிவித்தது.

அத்துடன், மலேசியாவின் தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகத்தில் சுல்தான் இப்ராகிம் பள்ளிவாசலின் அதிகாரபூர்வ திறப்புவிழா மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதையும் மாளிகை உறுதிசெய்தது.

இந்நிலையில், உடல்நலம் மேம்பட்டதும், மீண்டும் அதிகாரபூர்வ நிகழ்வுகளில் கலந்துகொள்ளப்போவதாக மலேசிய மாமன்னர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்