தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனிம வளங்கள் ஏற்றுமதி: அமெரிக்கா-மலேசியா இடையே வர்த்தக ஒப்பந்தம்

2 mins read
bc4c1076-4b5c-433a-b18e-82a2412ee994
கோலாலம்பூரில் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பின்போது வர்த்தக ஒப்பந்தத்தின் ஆவணங்களை அமெரிக்க அதிபர் டோனர்ட் டிரம்ப்பும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் காட்டுகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: அமெரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்காவுக்கு அரிய கனிமங்களை ஏற்றுமதி செய்ய இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.

47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கோலாலம்பூர் வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக வர்த்தக ஒப்பந்தத்தில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் அவர் கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தத்தில் அன்வார் இப்ராகிமின் நிர்வாகம் மேற்கொண்ட பல சலுகைகள் உள்ளடங்கியிருக்கின்றன. அவற்றில் அமெரிக்காவுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்வதும் அடங்கும்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நவீன தொழில்நுட்ப விநியோகச் சங்கிலியை மையமாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் வேளையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மலேசியாவுடனான ஒப்பந்தம் இருதரப்பிலும் முக்கியமான கனிமங்களில் வர்த்தக முதலீட்டை உறுதி செய்கிறது என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீயர் கூறியுள்ளார்.

“நமது தொழில்துறைக்கும் தொழில்நுட்பத்துக்கும் நமது பொருளியலுக்கும் மிக முக்கியமான கனிமங்களைக் கொண்டுள்ள உலகில் வாழ்ந்து வருகிறோம். அந்த வகையில் நம்மிடையே இதற்கான ஒத்துழைப்பும் அவசியமாகிறது. இது, ஒருவருக்கு ஒருவர் சுமூகமான விநியோகச் சங்கிலியை உறுதி செய்ய உதவுகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா விதித்துள்ள 19 விழுக்காடு வரி, மலேசியாவின் 200 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் 60 விழுக்காடு வரை பாதிக்காது. மலேசியா பெரும்பாலும் பகுதி மின்கடத்தி, மருந்துகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதே இதற்குக் காரணம். இத்தகைய பொருள்களுக்கு தற்போது வரி விதிக்கப்படவில்லை.

மலேசியாவில் 16 மில்லியன் டன்களுக்கும் அதிகமான அரிய கனிமங்கள் உள்ளன. அவற்றின் மதிப்பு ஒரு டிரில்லியன் ரிங்கிட்டாகும். இது, கனிமங்களுக்கான உலகளாவிய தேவையில் சுமார் 13 விழுக்காட்டைப் பூர்த்தி செய்கிறது.

குறிப்புச் சொற்கள்