பிரிட்டன் - அமெரிக்கா இடையில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம்

1 mins read
அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பிரிட்டிஷ் பயணத்தின்போது கையெழுத்தாகும்
7ebec017-1391-4992-8507-c6db76f64973
பிரிட்டனும் அமெரிக்காவும் செய்துகொள்ளவிருக்கும் மைல்கல் ஒப்பந்தம் குறித்த தகவலை வாஷிங்டனில் அமைந்துள்ள பிரிட்டிஷ் தூதரகம் வெளியிட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பிரிட்டனுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளும்போது, இரு நாடுகளுக்கு இடையே மிக முக்கியமான தொழில்நுட்ப ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் அமைந்துள்ள பிரிட்டிஷ் தூதரகம் சனிக்கிழமை (செப்டம்பர் 13) இந்தத் தகவலை வெளியிட்டது.

இரு தரப்பின் டிரில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்நுட்பத் துறைகளுக்கு இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வர்த்தகங்களுக்கும் பயனாளர்களுக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று கருதப்படுகிறது.

இறுதிக்கட்ட விவரங்கள் தொடர்பில் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் செயற்கை நுண்ணறிவு, பகுதி மின்கடத்திகள், தொலைத்தொடர்பு உள்ளிட்ட முக்கியத் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தப்படுவதாகவும் பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்தது.

திரு டிரம்ப், மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) பிரிட்டனுக்குச் செல்லவிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்