நேப்பாளம் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது: ஐநா

நேப்பாளம் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது: ஐநா

1 mins read
5a7cec46-5de8-40c3-924b-0cb70618ede6
நிலச்சரிவாலும் வெள்ளத்தாலும் பாலங்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து திரிசூலி ஆற்றைக் கடக்க மக்கள் கம்பிவட வண்டிகளைப் பயன்படுத்துகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

காத்மாண்டு: வரலாறு காணாத பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேப்பாளம், மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) தெரிவித்திருக்கிறது.

உயிருடன் இருக்கக்கூடிய எவரையும் சென்றடைய மீட்புக் குழுவினர் தீவிரமாய் முயன்று வருவதாகவும் அது கூறியது.

மக்களுக்கு உதவி வழங்குவது, அன்புக்குரியவர்களின் உடல்களை மீட்பது, காணாமற்போன உறவினர்களைக் கண்டறிவது, பிரிந்த குழந்தைகளை மீண்டும் ஒன்றுசேர்ப்பது முதலிய பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளரின் பேச்சாளர் தெரிவித்தார்.

இமயமலைப் பகுதியில் சென்ற வாரம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பல கிராமங்கள் அடித்துச்செல்லப்பட்டன. அதில் கிட்டத்தட்ட 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும் 4,200க்கும் மேற்பட்டோர் காணாமற்போயினர். நேப்பாளத்தின் பேரிடர் நிர்வாக அமைப்பு அந்தத் தகவல்களை வெளியிட்டது.

திபெத் பகுதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21. அங்கு 540க்கும் அதிகமானோர் காணாமற்போனதாகச் சீன அரசாங்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேப்பாள நீர்மின் உற்பத்திச் சுரங்கங்களில் சிக்கியுள்ளதாகக் கருதப்படும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஏறக்குறைய 12,000 பேர் மீட்கப்பட்டதாகப் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்