தாதிமை இல்லத்தில் தீச்சம்பவம்; 20 பேர் உயிரிழப்பு

தாதிமை இல்லத்தில் தீச்சம்பவம்; 20 பேர் உயிரிழப்பு

படம்: பிக்சாபே

09 Apr 2025 - 2:23 pm

1 mins read

பெய்ஜிங்: சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள தாதிமை இல்லத்தின் மூண்ட தீ காரணமாக 20 பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆனால் தீச்சம்பவம் தொடர்பான மேல் விவரங்களை அது வெளியிடவில்லை.

ஹேபெய் மாநிலத்தில் செங்ட நகரில் உள்ள தாதிமை இல்லத்தில், சீன நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) இரவு 9 மணி அளவில் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தாதிமை இல்லத்தில் இருந்த மற்றவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்