நியூயார்க்: தங்களின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்குக்கும் சீன உளவாளி என்று கூறப்படும் மாதுக்கும் இடையிலான தகாத உறவு குறித்து விசாரணை நடத்த என்விடியா நிறுவனம், அமெரிக்காவின் ஆகப்பெரிய சட்ட நிறுவனங்களில் ஒன்றை நியமித்துள்ளது.
என்விடியாவை நிறுவியவரில் ஒருவரான ஜென்சன் ஹுவாங், தனது திருமண வாழ்க்கைக்கு அப்பால் காதல் உறவில் இருந்ததை ஒப்புக்கொண்டார். அவருடன் தகாத உறவில் இருந்த ஏலிஸ் ஹுவாங் எனும் பெண் சீனாவின் உளவாளி என்று நம்பப்படுகிறது.
நியூயார்க்கில் இயங்கும் வாக்டெல், லிப்டன், ரோசன் & காட்ஸ் சட்ட நிறுவனத்தைத் தாங்கள் நியமித்துள்ளதாக என்விடியா செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) தெரிவித்தது. அந்நிறுவனத்தின் வழக்கறிஞரான ஜூன் கிம் சுயேச்சையாக முழுமையான விசாரணையை மேற்கொள்வார் என்று என்விடியா குறிப்பிட்டது.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவும் அதன் விசாரணையை நடத்திவருகிறது.
என்விடியாவின் பங்கு விலை கிட்டத்தட்ட ஓராண்டாகக் காணப்படாத அளவு குறைந்தது. கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து (நவம்பர் 6) அதன் பங்கு விலை 500 பில்லியன் டாலர் (640.84 பில்லியன் வெள்ளி) சரிந்துவிட்டது.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ள நிறுவனங்களின் ஒன்றாக என்விடியா விளங்குகிறது என்பது பரவலான கருத்து. அது, செயற்கை நுண்ணறிவுக் கருவிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை கணினிச் சில்லை உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனமாகும்.
என்விடியா, ஆப்பிளுக்கு அடுத்தபடியாக உலகின் ஆக மதிப்புமிக்க நிறுவனமாகும்.
சீனப் பல்கலைக்கழகம் வாங்கிய என்விடியா சில்லுகள்
இதற்கிடையே, அமெரிக்க ஏற்றுமதி கறுப்புப் பட்டயலில் இருந்தபோது சீன தேசிய ராணுவத்துடன் நெருங்கிய தொடர்புடைய அந்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று என்விடியாவின் சக்திவாய்ந்த எச்200 ஏஐ சில்லுகளை வாங்கியிருப்பது பதிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இது, சீனா அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்க அமெரிக்கா எடுத்துவரும் நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருப்பதைக் சுட்டிக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.
நார்த்வெஸ்டர்ன் பொலிடேக்னிக்கல் பல்கலைக்கழகம் என்றழைக்கப்படும் அந்தப் பல்கலைக்கழகம் தற்காப்பில் கவனம் செலுத்தும் சீனப் பல்கலைக்கழகக் குழுமத்தில் இடம்பெறும் ஒன்றாகும். அது, சென்ற மாதம் 874,700 யுவன்னுக்கு (123,000 வெள்ளி) இரண்டு எச்200 சில்லுகளை வாங்கியதாக அதன் இணையத்தளத்தில் உள்ள பதிவுகளில் தெரியவந்துள்ளது.
