‘துணை அதிபர் விடுத்த மிரட்டல் தேசிய பாதுகாப்பு விவகாரமாகும்’

‘துணை அதிபர் விடுத்த மிரட்டல் தேசிய பாதுகாப்பு விவகாரமாகும்’

1 mins read
98206833-c792-422d-9418-cfd0526e2df8
தாம் கொல்லப்பட்டால் அதிபர் மார்கோஸ், அவரது மனைவி, நாடாளுமன்ற நாயகர் ஆகியோரைக் கொன்றுவிடுமாறு கொலையாளி ஒருவருக்கு உத்தரவிட்டுள்ளதாகப் பிலிப்பீன்சின் துணை அதிபர் சாரா டுட்டர்டே நவம்பர் 23ஆம் தேதியன்று தெரிவித்திருந்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியருக்கு எதிராக அந்நாட்டுத் துணை அதிபர் சாரா டுட்டர்டே விடுத்த படுகொலை மிரட்டலை தேசிய பாதுகாப்பு விவகாரமாக பிலிப்பீன்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எட்வார்டோ அனோ வர்ணித்துள்ளார்.

தாம் கொல்லப்பட்டால் அதிபர் மார்கோஸ், அவரது மனைவி, நாடாளுமன்ற நாயகர் ஆகியோரைக் கொன்றுவிடுமாறு கொலையாளி ஒருவருக்கு உத்தரவிட்டுள்ளதாக திருவாட்டி டுட்டர்டே நவம்பர் 23ஆம் தேதியன்று தெரிவித்திருந்தார்.

திருவாட்டி டுட்டர்டேயின் இச்செயல், மிரட்டல் முறையற்றவை என்று திரு அனோ கூறினார்.

இதுதொடர்பாகப் பிலிப்பீன்ஸ் தேசிய பாதுகாப்பு மன்றம் விசாரணை நடத்தும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்