ஜெருசலம்: காஸாவைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது.
இதன் காரணமாக காஸா முனையின் வடக்குப் பகுதியில் இளம்பிள்ளை வாத தடுப்பூசி போடும் பணிகள் முடங்கியுள்ளன.
எனவே, அந்நோயிலிருந்து ஏறத்தாழ 120,000 சிறுவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை என்று ஐக்கிய நாட்டு நிறுவன (ஐநா) அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது தடுப்பூசியை சிறுவர்களுக்குப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்கள் இருக்கும் இடத்துக்குத் தடுப்பூசி மருந்தை விநியோகம் செய்ய முடியவில்லை என்று அவர்கள் கூறினர்.
இதன் காரணமாக இளம்பிள்ளை வாதத்தை ஏற்படுத்தும் கிருமி காஸாவெங்கும் பரவும் சாத்தியம் இருப்பதோடு அண்டை நாடுகளுக்கும் பரவக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.