தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் போப்பாண்டவர்

1 mins read
e45e400f-e2dd-4850-81f2-99a7b87f21c9
போப் ஃபிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக திங்கட்கிழமை (பிப்ரவரி 24) தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பிப்ரவரி 23 இரவு அவர் நன்கு உறங்கியதாகவும் ஓய்வெடுத்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். - படம்: ஏஎஃப்பி

வத்திக்கன்: இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள போப்பாண்டவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக திங்கட்கிழமை (பிப்ரவரி 24) தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் பிப்ரவரி 23 இரவு அவர் நன்கு உறங்கியதாகவும் ஓய்வெடுத்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மூச்சுத் திணறல் காரணமாக பிப்ரவரி 14ல் போப்பாண்டவர் இத்தாலியத் தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

88 வயது போப் ஃபிரான்சிஸ் 2013ஆம் ஆண்டிலிருந்து போப்பாண்டவராக இருந்து வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்குப் பலமுறை உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்