தங்கத்தின் விலை சற்று குறைந்தது

தங்கத்தின் விலை சற்று குறைந்தது

1 mins read
அமெரிக்கா வட்டி விகிதங்களை உயர்த்தவில்லை என்றால் தங்கத்தின் விலை கூடும்
0ea67a82-085e-4421-8208-824886c55c42
சந்தையில் ‘ஸ்பாட் கோல்ட்’ விலை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) அவுன்ஸ் ஒன்றுக்கு 0.3 விழுக்காடு குறைந்து $4,330.46 டாலராகப் பதிவானது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஏழு வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை, திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) சற்றுக் குறைந்துள்ளது.

சந்தையில் ‘ஸ்பாட் கோல்ட்’ விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.3 விழுக்காடு குறைந்து $4,330.46 டாலராகப் பதிவானது.

அமெரிக்க வட்டி விகிதப் போக்கை அறிய முதலீட்டாளர்கள் அந்நாட்டின் பணவீக்கத் தரவை எதிர்நோக்கியுள்ளனர்.

கேசிஎம் ட்ரேட் நிறுவனத்தின் முதன்மைச் சந்தைப் பகுப்பாய்வாளர் டிம் வாட்டரர், “கடந்த வார உயர்வுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் லாபத்தை எடுப்பதில் ஈடுபட்டதால் தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. இது இயல்பான சீரமைப்பே தவிர, சந்தை அமைப்பில் பெரிய மாற்றமில்லை; குறுகிய காலத்தில் $4,300 டாலருக்கு மேல் தங்கம் நிலையாக இருக்கும்,” என்று கூறினார்.

அமெரிக்கப் பயனீட்டாளர் விலைக் குறியீட்டுத் தரவுகள் இந்த வாரம் வெளியிடப்பட உள்ளன.

“பணவீக்கம் குறைவாக இருந்தால், வட்டி விகிதங்களை உயர்த்தாமல் அப்படியே வைத்திருக்க வாய்ப்பு அதிகம். இது தங்கத்தின் விலை மேலும் உயர வழிவகுக்கும்,” என்றார் திரு வாட்டரர்.

ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை மாற்றங்களும் வரும் நாள்களில் தங்கத்தின் விலையைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
உலகம்சிங்கப்பூர்தங்கம்விலைசரிவுஅமெரிக்காஈரான் போர்எண்ணெய்