மலேசியாவிலிருந்து சீனாவுக்கு ‘பர்ட்ஸ் நெஸ்ட்’ ஏற்றுமதிகளுக்குத் தற்காலிகத் தடை

$15 மி. மதிப்பில் தயாரிப்புகளை விற்க முடியாதது குறித்து வணிகர்கள் கவலை

1 mins read
b688dc97-d4e1-4bae-83af-7022f4650520
தற்காலிக ஏற்றுமதித் தடையால், 50 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 15 டன் எடைகொண்ட பர்ட்ஸ் நெஸ்ட் தயாரிப்புகளை விற்க முடியாமல் போவதாக மலேசியத் தயாரிப்பாளர்கள் கவலையுறுகின்றனர். - கோப்புப் படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ‘பர்ட்ஸ் நெஸ்ட்’ தயாரிப்பாளர்கள், சீனப் புத்தாண்டுக்குள் ஏறக்குறைய 50 மில்லியன் ரிங்கிட் (S$15.2 மி.) மதிப்பிலான பர்ட்ஸ் நெஸ்ட் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பைத் தவறவிட்டு விடுவோமோ என அஞ்சுகின்றனர்.

மலேசியாவில் ‘நியூகாசல்’ நோய்த்தொற்று கண்டறியப்பட்டிருப்பதே இதற்குக் காரணம். வேகமாகப் பரவும் அத்தொற்று உள்நாட்டு, வனப்பறவைகளைப் பாதிக்கிறது.

2025 ஜனவரி 29ஆம் தேதி வரும் சீனப் புத்தாண்டுக்காக பர்ட்ஸ் நெஸ்ட் ஏற்றுமதிகளைத் தயார்செய்து வரும் மலேசிய நிறுவனங்களுக்கு, இத்தொற்று குறித்து வெளியான அறிவிப்பு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் நியூகாசல் நோய்த்தொற்று காரணமாக, டிசம்பர் 25 முதல் சீனாவுக்கு பர்ட்ஸ் நெஸ்ட் ஏற்றுமதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கால்நடைச் சேவைத் துறை அறிவித்தது.

இந்தத் தற்காலிக ஏற்றுமதித் தடையால், 50 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 15 டன் எடைகொண்ட பர்ட்ஸ் நெஸ்ட் தயாரிப்புகளை விற்க முடியாமல் போவதாக மலேசியத் தயாரிப்பாளர்கள் கவலையுறுகின்றனர்.

பர்ட்ஸ் நெட்ஸ் தயாரிப்புகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்ட 58 நிறுவனங்கள் தற்போது உள்ளன.

இந்நிலையில், இந்தத் தடை குறித்து சீன அதிகாரிகளிடமிருந்து ஆக அண்மைய தகவலை மலேசியத் தயாரிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்