மொரோக்கோ குடியேறிகளுக்கு எதிராக ஸ்பெயின் தலைநகரில் போராட்டம்

மொரோக்கோ குடியேறிகளுக்கு எதிராக ஸ்பெயின் தலைநகரில் போராட்டம்

1 mins read
a9ab8c33-0663-45bd-af65-5d1c1b0cb1ff
தலைநகர் மட்ரிட்டில் உள்ள மொரோக்கோ தூதரகத்தின் வெளியே வெள்ளிக்கிழமை (ஜூலை 31) மக்கள் போராட்டம் நடத்தினர். - படம்: ஏஎஃப்பி
மொரோக்கோவில் இருந்து ஸ்பெயினின் சியுடா நகருக்குள் வந்த குடியேறிகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடத்தினர்.
மொரோக்கோவில் இருந்து ஸ்பெயினின் சியுடா நகருக்குள் வந்த குடியேறிகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடத்தினர். - படம்: ஏஎஃப்பி

மட்ரிட்: ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் உள்ள மொரோக்கோ தூதரகத்தின் வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) போராட்டம் நடத்தினர்.

மொரோக்கோ் எல்லைக்கும் அருகே உள்ள சியுடா எனும் ஸ்பானிய நகருக்குள் ஏறத்தாழ 60,000 மொரோக்கர்கள் அண்மைய நாள்களில் நுழைந்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் அறிவித்த நிலையில் இந்தப் போராட்டங்கள் வெடித்தன.

இருப்பினும், நுழைந்தவர்கள் கிட்டத்தட்ட அனைவரும் மீண்டும் மொரோக்கோ திரும்பிவிட்டனர் என்று ஸ்பெயின் அரசாங்கம் உறுதிப்படுத்தியும் போராட்டங்கள் தொடர்ந்தன.

போராட்டக்காரர்கள் மொரோக்கோவின் குடியேறிகள் ஸ்பெயினின் சியுடா நகருக்குள் ‘படையெடுத்து’ வந்துள்ளனர் என கோஷங்கள் எழுப்பினர்.

அவர்களில் பலர் வெளிப்படையாக ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகாரியான ஹிட்லர் ஊக்குவித்த ‘நாஸி’ அடையாளத்துக்குரிய, குறிப்பிட்ட சில நாடுகளில் தடைசெய்யப்பட்டக் சைகைகளைச் செய்தனர்.

“ஸ்பெயின் கிறிஸ்துவ நாடு, முஸ்லிம் நாடன்று! என்றும் தேசிய ஒற்றுமை!,” என்றும் அவர்கள் முழங்கினர். பலர் கறுப்பாடைகளை அணிந்தபடி சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த தேசியக் கொடிகளை ஏந்தியிருந்தனர்.

போராட்டக்காரர்கள் ஐரோப்பாவின் வலது சாரி அமைப்புகள் முன்னெடுத்த ‘ரெமிகிரேஷன்’ என்ற வாசகம் கொண்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர். அந்தச் சொல் அந்நியக் குடியேறிகளைத் திருப்பி அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்