தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
இந்த எதிர்ப்புக் குரல், 1986ஆம் ஆண்டில் நடந்த மக்கள் சக்தி போராட்டத்தை நினைவூட்டியது

‘திருடிய பணத்தை திரும்பத் தருக’: பிலிப்பீன்சில் அமைதிப் பேரணி

2 mins read
a9a12bf9-eeb3-4f18-bbaa-27523e1c5904
“கல்விக்கு நிதி தருக, ஊழலுக்கு அல்ல” என்ற தலைப்புடன் இருந்த பதாகையுடன் பிலிப்பீன்ஸ் மக்கள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) வெள்ள நிவாரண நிதி ஊழலை எதிர்த்து அமைதிப் போராட்டம் நடத்தினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மணிலா: ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) அன்று மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில், கடல் வெள்ளம் போல் கருப்பு வெள்ளை நிறம், மணிலாவையும் அருகில் உள்ள குவேசன் நகரையும் சூழ்ந்தது.

அண்மையில் நாட்டில் நிகழ்ந்த புயல், வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கென அரசாங்கம் ஒதுக்கிய நிவாரண நிதியில் ஊழல் நடத்துள்ளதென அறிக்கைகள் வெளிவந்தன. அதனை அடுத்து இந்த ஊழல் எதிர்ப்புப் பேரணி மக்களால் நடத்தப்பட்டுள்ளது.

பேரணி, 1986ஆம் ஆண்டில் ஆட்சியை மாற்றிய மக்கள் சக்தி புரட்சியை நினைவூட்டியது. சிங்கப்பூர் $42.8 பில்லியன் (பிலிப்பீன்ஸ் 1.9 டிரில்லியன் பெசோ) மதிப்புள்ள நிவாரண நிதியில் முறைகேடு நடந்திருப்பது அரசாங்க விசாரணையில் கண்டறியப்பட்டது.

பேரிடர்களால் பாதிப்படைந்த உள்நாட்டு கட்டமைப்பை மேம்படுத்த அந்த நிதி ஒதுக்கப்பட்டது. விசாரணையில் பல திட்டங்கள் தொடங்கப்படாமலேயே அதற்கான நிதிகள் மாயமானதும் தெரியவந்துள்ளது. மக்கள் அவற்றுக்கான காரணங்களைக் கேட்கின்றனர். சட்டத்துறை அதிகாரிகள், கட்டுமானத் துறை முதலாளிகள், பொதுப் பணித்துறையினர் எனத் தற்போது விசாரணைக்கு உட்பட்டோரை பேரணியில் மக்கள் கண்டித்தனர்.

பல கருத்தியல் வேறுபாடுகள் உடைய குழுக்களை இந்த அமைதிப் பேரணி ஒன்றிணைத்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்தக் குற்றங்கள் நடந்துள்ளன. ஆகவே, பேரணியில் முன்னாள் அதிபர் டுட்டர்டே, இந்நாள் அதிபர் மார்கோஸ், அவர்கள் சார்ந்த அதிகாரிகள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்ற எதிரொலிகள் எழுந்தன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட பேரணியில் அதிகமான இளையர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பேரணியில் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிறம் ஒற்றுமையையும், கறுப்பு எதிர்ப்பையும் வெளிப்படுத்தின என்று அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்