பாலைவனப் பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்படும் அபாயம்: சீனா எச்சரிக்கை

பாலைவனப் பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்படும் அபாயம்: சீனா எச்சரிக்கை

1 mins read
8fc0ea47-d796-4f0d-9953-cf1ea48552a0
ஸின்ஜியாங்கின் டக்லமாக்கன் இவ்வாண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் முதல் வெள்ளத்தைச் சந்தித்துள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஹாங்காங்: சீனா, அதன் வடக்கு மேற்கு ஸின்ஜியாங், அதற்கு அருகில் வசிக்கும் சமூகங்களில் கடுமையான வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.

வருகின்ற கோடைக் காலத்தில் வழக்கத்திற்கு மாறான அதிக வெப்பம், அதிக மழை, பனியாறுகள் உருகுதல் போன்றவற்றால் பெருவெள்ளம் ஏற்படலாம் என்று அது கூறியுள்ளது.

சீனாவின் ஆகப்பெரிய பாலைவனப் பகுதியான ஸின்ஜியாங்கில் உள்ள டக்லமாக்கனில் இவ்வாண்டு ஜூன் மாத முற்பகுதியில் முதல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்று சிசிடிவி ஊடகம் ஜூன் 12ஆம் தேதி செய்தி வெளியிட்டது. வறண்ட மணல் குன்றுகளில் ஏற்பட்ட வெள்ளத்தையும் அந்தத் தொலைக்காட்சி காட்டியது.

இதேபோன்ற வெள்ளத்தை 2021லிருந்து டக்லமாக்கன் சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாதங்களில் வெப்பம் உச்சத்தைத் தொடும்போது பொதுவாக அங்கு வெள்ளம் ஏற்படுகிறது.

ராய்ட்டர்ஸ் பருவநிலை கண்காணிப்பின்படி ஜூன் 12 அன்று ஜின்ஜியாங்கில் ஆண்டின் இந்தக் காலத்திற்கான சராசரியைவிட 7.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து 38 டிகிரி செல்சியசை எட்டியது.

மேற்கு மற்றும் தெற்கு ஸின்ஜியாங்கிலும் அண்மையில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் ஜூன் மாதத் தொடக்கத்திற்கான முந்தைய சராசரியைவிட மழைப்பொழிவு இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக இருந்ததாக சிசிடிவி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்