சாபா வெள்ளம்: 6,000 பேர் வெளியேற்றம்

சாபா வெள்ளம்: 6,000 பேர் வெளியேற்றம்

1 mins read
f539f6d1-ac80-49d4-95f8-5e304f55ca8c
மலேசியாவின் சாபா மாநிலத்தைப் பாதித்துள்ள வெள்ளம். - படம்: பெர்னாமா

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள சில பகுதிகளில் வெள்ளப் பிரச்சினை மூன்றாவது நாளாக மோசமாக இருந்துவரும் வேளையில் கிட்டத்தட்ட 6,000 பேர் பாதுகாப்பை நாடியுள்ளனர்.

சாபாவின் உட்புற, தென்மேற்கு வட்டாரங்களில் வெள்ளம் தொடர்ந்து மோசமாக இருந்து வருகிறது. டெனம், சுக் பகுதிகளின் உட்புறங்கள், பியூஃபோர்ட், மெம்பாக்குட், சிப்பித்தாங் ஆகியவற்றில் 2,067 வீடுகளைச் சேர்ந்த மொத்தம் 5,860 குடியிருப்பாளர்கள் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெனம்தான் ஆக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி என்று சாபா மாநில பேரிடர் தளபத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அங்கு 46 கிராமங்களில் 1,207 வீடுகளைச் சேர்ந்த 3,544 மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பள்ளிகள் தொடர்ந்து வெள்ளத்தால் நேரடியாக அல்லது சாலைகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சில பள்ளிகள் தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மாநிலத் தலைநகர் கோத்தா கினபாலுவுக்கும் தாழ்வான பகுதியில் அமைந்திருக்கும் பியுஃபோர்ட் மாவட்டத்துக்கும் இடையே ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பியூஃபோர்ட் இவ்வாண்டு மட்டும் மூன்று முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. ஆனால், பயிர்கள், பண்ணை விலங்குகள், உடைமைகள் ஆகியவற்றுக்குக் கணிசமான சேதம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்