மணிலா: கடைத்தொகுதிக்கு வெளியே பள்ளிச் சீருடையில் பூமாலை விற்றுக்கொண்டிருந்த ஒரு சிறுமியை, அக்கடைத்தொகுதியின் பாதுகாவல் அதிகாரி முரட்டுத்தனமாகக் கையாண்டதை அடுத்து அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ மணிலாவின் பிரபல கடைத்தொகுதிகளில் ஒன்றான ‘எஸ்எம் மெகாமால்’ வெளியே பிலிப்பீன்ஸ் நாட்டின் தேசிய மலரான சம்பகீத்தாவை, பூமாலை வடிவில் விற்றுக்கொண்டிருந்தார் அந்தச் சிறுமி.
அவ்விடத்திலிருந்து விரட்டும் நோக்கில் பாதுகாவல் அதிகாரி சிறுமியை உதைத்ததுடன் அவரிடம் இருந்த பூமாலைகளைப் பிய்த்து எறிந்தார்.
“எங்களின் கடைத்தொகுதிக்கு வெளியே துரதிருஷ்டவசமான சூழலுக்கு சிறுமி ஆளானது குறித்து எங்களின் அனுதாபத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று எஸ்எம் மெகாமால் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
சம்பவம் குறித்து உடனே முழுமையான விசாரணை மேற்கொள்ளுமாறு பாதுகாவல் நிறுவனத்திடம் கடைத்தொகுதி கோரியுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டது.
‘அனைவரையும் உள்ளடக்குவதை ஊக்குவிக்கும்’ கடைத்தொகுதி, சிறுமிக்குப் பாதுகாவல் அதிகாரி இழைத்த செயலை வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டது.
பரவலாகப் பகிரப்பட்ட காணொளியில், சம்பகீத்தா விற்கும் ஒரு சிறுமியுடன் பாதுகாவல் அதிகாரி சச்சரவில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.
சிறுமி எழுந்து நின்றபோது அவரிடம் இருந்த பூமாலைகளை அந்தப் பாதுகாவல் அதிகாரி பிடுங்கி அவற்றைச் சின்னாபின்னமாக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
இதனால் சிறுமி அதிகாரியை அடிக்க முற்பட, அந்த ஆடவரும் சிறுமியை உதைக்கலானார்.