சிங்கப்பூரும் பங்ளாதேஷும் கரிமக் குறைப்பு ஊக்கப்புள்ளி தொடர்பான புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் சனிக்கிழமை (நவம்பர் 14) கையெழுத்திட்டன.
சிஓபி31 எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மன்ற மாநாட்டின் ஒரு பகுதியாக, பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6க்கு இணங்க அந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு ஏற்படுத்தப்பட்டது.
சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற நிரந்தரச் செயலாளர் மெல்வின் ஓங்கும் பங்ளாதேஷின் சுற்றுப்புற, வன, பருவநிலை மாற்றத் துறைகளுக்கான துணை அமைச்சர் ஷேக் ஃபரிதுல் இஸ்லாமும் அதில் கையெழுத்திட்டனர்.
அந்தப் புரிந்துணர்வுக் குறிப்பின்கீழ், பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6.2க்கு இணங்க கரிமக் குறைப்பு ஊக்கப்புள்ளிகளைச் சட்டபூர்வமாகக் கட்டுப்படுத்தும் புதிய உடன்பாட்டை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும்.
மேலும், உயர்தர மற்றும் நம்பகத்தன்மை கொண்ட கரிமச் சந்தைகளை மேம்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகளையும் அறிவாற்றைலையும் பரிமாறிக்கொள்ளப் புதிய புரிந்துணர்வுக் குறிப்பு வழிவகுக்கிறது.
இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் கரிமக் குறைப்பு ஊக்கப்புள்ளித் திட்டங்களை அடையாளம் காணவும் அது ஒத்துழைக்கும்.
நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில், இரு நாடுகளும் தங்களின் பருவநிலை இலக்குகளை அடைவதற்கு அந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு ஆதரவளிக்கும்.
