புதுடெல்லி: இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தில் இணைந்துள்ளார்.
அவர் எழுதிய சுயசரிதையான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்’ என்ற புத்தக வெளியீடு குறித்து அதில் முதல் பதிவிட்டுள்ளார்.
அவரது நூலை நவம்பர் 10ஆம் தேதி வெளியிட இருப்பதாக அமெரிக்காவின் ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் அண்மையில் அறிவித்தது.
அவரது பதிவில் அனைவருக்கும் வணக்கங்களைத் தெரிவித்துக்கொண்ட அவர், அத் தருணத்தைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.
‘இதோ, எ ஜர்னி ஆப் லவ்’ எனும் புத்தகத்தின் முதல் பார்வை. இது அன்பு, கடமை, இழப்பு, தனக்கான தனியிடத்தை அடையாளம் காணுதல் போன்றவற்றைப் பற்றிய கதை. அதனை உங்களுடன் பகிர மிக ஆவலாக உள்ளேன்,” என்று தெரிவித்தார்.
புத்தகத்தில் அவரது இளமைப் பருவ புகைப்படங்கள் உள்ளதை அவர் சுட்டினார். புத்தகம் தயாரானதைக் கொண்டாட திருவாட்டி சோனியா காந்திக்கு மகள் பிரியங்கா இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
