ஈரான் போரால் தென்கிழக்காசியச் சுற்றுலாத் துறை பாதிப்பு

ஈரான் போரால் தென்கிழக்காசியச் சுற்றுலாத் துறை பாதிப்பு

1 mins read
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஊழியர்கள்
2708f98f-cdc0-4c7e-a005-cb52a3b68b85
தாய்லாந்து, பேங்காக்கில் உள்ள வாட் அருண் கோயிலில் கடும் வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நிழலில் ஒதுங்கி நிற்கும் சுற்றுப்பயணிகள். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

சியாம் ரீப்: ஈரான் போர் காரணமாக தென்கிழக்காசிய நாடுகளின் சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விமானக் கட்டண உயர்வு, துபாய், தோஹா வழியிலான விமானப் போக்குவரத்து முடக்கம் போன்றவற்றால் ஐரோப்பியச் சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதியாகக் குறைந்துள்ளது.

குறிப்பாக, கம்போடியாவில் புகழ்பெற்ற அங்கோர் வாட் அமைந்துள்ள சியாம் ரீப் பகுதியில் அனைத்துலகப் பயணிகளின் வருகை 45 விழுக்காடு வரை சரிந்துள்ளது. அங்கிருக்கும் ‘டுக் டுக்’ வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், விமான நிலைய உணவக ஊழியர்கள் தங்களின் அன்றாட வருமானத்தை இழந்து தவிக்கின்றனர்.

அதேபோல தாய்லாந்தின் ஃபாங் ஙா மாநிலத்தில் ஹோட்டல் முன்பதிவுகள் 50 விழுக்காடுவரை குறைந்துள்ளன. படகுச் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான படகுகள் வாடிக்கையாளர்கள் இன்றி முடங்கிக் கிடக்கின்றன. அங்குள்ள ஊழியர்கள் வருமானமின்றிப் பழங்களையும் மூலிகைகளையும் சேகரித்து உணவு சமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தோனீசியாவின் பாலித் தீவு, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சீன நாட்டுப் பயணிகளால் ஓரளவு சமாளித்து வந்தாலும், ஐரோப்பியப் பயணிகளின் வருகை குறைந்ததால் 2026ஆம் ஆண்டில் முன்பதிவுகள் 45 விழுக்காடு வரை சரியக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நிலைமையைச் சமாளிக்க ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளிலிருந்து புதிய சுற்றுலாப் பயணிகளைக் கவர பாலி நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கொவிட்-19 பேரிடருக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளியல் நெருக்கடியாக இதைக் கருதும் தென்கிழக்காசியச் சுற்றுலாத் துறையினர், வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித்தல், விவசாயம், பிற வேலைகளுக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்