ஜப்பானின் ஒசாக்காவில் கத்திக்குத்து; ஆடவர் கைது

ஜப்பானின் ஒசாக்காவில் கத்திக்குத்து; ஆடவர் கைது

படம்: ஏ‌ஷிய நியூஸ் நெட்வர்க்

08 Nov 2026 - 6:51 pm

1 mins read

தோக்கியோ: ஜப்பானின் ஒசாக்காவில் உள்ள புத்தகக் கடை ஊழியர் ஒருவரைக் கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்ட ஆடவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

சமூகத்தின் மீதுள்ள கசப்புணர்வால் அத்தகைய செயலைப் புரிந்ததாக ஆடவர் கூறினார்.

சத்தோ‌ஷி ஒகாமோட்டோ என்று அடையாளம் காணப்பட்ட 33 வயது நபர், சமையலறை கத்தியைக் கொண்டு ஊழியரைக் குத்தியதாகக் கூறப்படுகிறது.

மாருசென் அன்ட் ஜங்குடோ என்ற கடையில் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

கத்தியால் குத்தப்பட்ட ஊழியரின் உடல்நலம் குறித்து அதிகாரிகள் தகவல் அளிக்கவில்லை. இருப்பினும், அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுத்து கைதாகும் வரை கடைக்குள் இருந்த சந்தேக நபர் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதும் தமக்கு வெறுப்புணர்வு இருப்பதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்