கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு

கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு

1 mins read
149cdf98-0944-4142-bc7b-161ad9cb477f
கொலம்பியாவில் கனத்த மழையால் பல வீடுகள் நீரில் மூழ்கின. - படம்: கொலம்பியா ஒன்

பொகோடா: கொலம்பியாவில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் 18 பேர் மாண்டதை அடுத்து அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளக்காடாக மாறிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

கோர்டோபா என்ற பகுதியில் அணையும் ஆறுகளும் கரைபுரண்டதில் வீடுகள் நீரில் மூழ்கின. ஆக மோசமாக ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 150,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

வெள்ளத்தில் 4,300க்கும் அதிகமான வீடுகள் அழிந்தன. கால்நடைகளுக்கு உணவளிக்கும் நிலங்களும் வேளாண் பகுதிகளும் நீரில் அமிழ்ந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கடுமையான வெள்ளம் காரணமாகக் குறைந்தது 1,200 கால்நடைகள் மாண்டன.

கொலம்பியாவின் பேரிடர் மீட்பு அமைப்பு, நாடளவில் 22 மரணங்கள் நேர்ந்ததாகக் கூறியது.
கொலம்பியாவின் பேரிடர் மீட்பு அமைப்பு, நாடளவில் 22 மரணங்கள் நேர்ந்ததாகக் கூறியது. - படம்: சைனா டெய்லி

கொலம்பியாவின் பேரிடர் மீட்பு அமைப்பு, பிப்ரவரி 9ஆம் தேதி நிலவரப்படி நாடளவில் 22 மரணங்கள் நேர்ந்ததாகக் கூறியது.

தற்போது அவசரநிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து கொலம்பிய அதிபர் குஸ்தாவோ பெத்ரோவால், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே பாதிக்கப்பட்ட வெவ்வேறு துறைகளுக்கான வளங்களை ஒதுக்கீடு செய்ய முடியும்.

குறிப்புச் சொற்கள்