பொம்பியோ: ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க படைகளை இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் நியமிக்க பரிசீலனை

சீனாவின் அச்சுறுத்துல் அதிகரித்து வருவதையடுத்து, ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கப் படைகளை ஆசியாவில் நியமிப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ கூறியுள்ளார்.

இந்தப் பரிசீலனை அதிபர் டிரம்ப்பின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் இதன் அங்கமாக ஜெர்மனியில் தமது படைகளை 52,000த்திலிருந்து 25,000ஆக குறைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது என்றார் மைக் போம்பியோ.

“சில இடங்களில் அமெரிக்கப் படைபலத்தைக் குறைத்து சீன ராணுவத்தினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நாடுகளான இந்தியா, மலேசியா, வியட்னாம், இந்தோனீசியா, தென்சீன கடல் பகுதி சவால்களைச் சமாளிக்க அமெரிக்க ராணுவத்தை இப்பகுதிகளில் பயன்படுத்தி, இவ்விடங்களைப் பலப்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.

"எனவே, அமெரிக்க படைபலம் குறைக்கப்படும் நாடுகள் தங்களுக்கான பாதுகாப்பை தாங்களே வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் சீன ராணுவத்தை எதிர்கொள்ள அங்கு படைபலத்தைக் கூட்ட முடியும், இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் முழு ஆலோசனைகளை மேற்கொள்வோம்,” என்றார் திரு பொம்பியோ.

ஜெர்மனியிலிருந்து அமெரிக்கா தன் படைகளைக் குறைத்தால் ஐரோப்பாவில் ரஷ்யாவின் ஆதிக்கம் தலைதூக்கும் என்ற விமர்சனங்கள் ஏற்கெனவே எழுந்துள்ளன.

ஆனால் பொம்பியோ இந்த வாதங்களை மறுத்துள்ளார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!