ஆசிய நாடுகளில் மகிழ்உலா விமானங்களுக்கு பெரும் வரவேற்பு

விமானத்தில் இருந்தபடி ஆஸ்திரேலியாவின் உள்ளடங்கிய பகுதியான ‘அவுட்பேக்’, ‘கிரேட் பேரியர்’ பாறைத்திட்டுகளைக் கண்டுகளிக்கும் வகையில் குவான்டாஸ் ஏர்வேஸ் நிறுவனம் ஏழு மணி நேர மகிழ்உலா விமான சேவையை அறிவித்துள்ளது. இதற்கான பயணச்சீட்டுகள் பத்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

ஒரு விமான நிலையத்தில் இருந்து கிளம்பி, வானில் வட்டமடித்தபின், மீண்டும் அதே விமான நிலையத்தில் இறங்கும் ‘மகிழ்உலா’ விமான சேவை ஆசியாவில் பிரபலமடைந்து வருகிறது.

தைவானின் ஈவா ஏர்வேஸ், ‘ஹலோ கிட்டி’ படங்கள் வரையப்பட்ட தனது பிரத்தியேக விமானத்தையும் ஜப்பானின் ‘ஏஎன்ஏ’ நிறுவனத்தின் ஏர்பஸ் விமானமொன்றும் இப்படி மகிழ்உலா பயணத்திற்காக அண்மையில் இயக்கின.

தென்கொரியாவின் ஜேஜு தீவுகளுக்கு மேல் பறக்கவுள்ள ‘டைகர்ஏர் தைவான்’ விமானத்திற்கான பயணச்சீட்டுகள் நான்கு நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பல இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான விமானச் சேவைகளை அடுத்த மாதம் முதல் தொடங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இத்தகைய ஒரு யோசனையை சுற்றுப்புற ஆர்வலர்களும் இணையப் புழங்கிகளும் குறைகூறி வருகிறார்கள். 

பலவற்றையும் தான் ஆராய்ந்து வருவதாகவும் இத்தகைய சுற்றிப் பார்ப்பு விமானச் சேவையைத் தொடங்குவதா, வேண்டாமா என்பது பற்றி இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்றும் எஸ்ஐஏ தெரிவித்துள்ளது. 

பல இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான விமானச் சேவைகள் புதிதானது அல்ல. அண்டார்டிகா ஃபிளைட்ஸ் என்ற நிறுவனம், குவான்டாஸ் நிறுவனங்களின் விமானங்களை வாடகைக்கு எடுத்து கடந்த 26 ஆண்டு காலமாக அண்டார்டிகாவில் இச் சேவையை வழங்கி வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon