கிருமி தொற்றியவர் சென்றதைத் தொடர்ந்து செம்பவாங் பள்ளிவாசல் இரு நாட்களுக்கு மூடல்

கிருமி தொற்றியவர் சென்றதைத் தொடர்ந்து செம்பவாங் பள்ளிவாசல் இரு நாட்களுக்கு மூடல்

1 mins read
9ff34404-c77f-419b-aa1a-3c530a18fc47
செம்பவாங்கில் உள்ள பெத்தெம்பாத்தான் மலாயு செம்பவாங் பள்ளிவாசல் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

செம்பவாங்கில் உள்ள பெத்தெம்பாத்தான் மலாயு செம்பவாங் பள்ளிவாசல், தொற்றுக்கு எதிரான சுத்தப்படுத்தும் பணிக்காக இரண்டு நாட்கள் மூடப்படும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) இன்று (ஏப்ரல் 27) அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் பள்ளிவாசலுக்கு வருகை மேற்கொண்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முயிஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
பள்ளிவாசல்கிருமித்தொற்றுசிங்கப்பூர்