சாங்கி விமான நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள குடிநுழைவுச் சோதனைச் சாவடி (ஐசிஏ) அதிகாரிகள் 32 பேர் தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏறக்குறைய 100 ஐசிஏ அதிகாரிகளுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம் இன்று (ஏப்ரல் 29) தெரிவித்துள்ளது.
முன்னதாக கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட 38 வயது அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 32 அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.
சிங்கப்பூரில் நேற்று (ஏப்ரல் 28) சமூகத்தில் மூவருக்குத் தொற்று அறிவிக்கப்பட்டது. அவர்களில் இந்த ஐசிஏ அதிகாரியும் ஒருவர்.

