ஆயிரம் ஆண்டு காணாத மழைக்கு 25 பேர் மரணம்; அணை உடையும் அபாயம்

ஆயிரம் ஆண்டு காணாத மழைக்கு 25 பேர் மரணம்; அணை உடையும் அபாயம்

1 mins read
bf86843d-6514-4e2f-a0ec-8febd96ce9c5
வெள்ளநீரில் பல கார்கள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

மத்திய சீன மாநிலமான ஹெய்னானில் பெய்த தொடர் கனமழை காரணமாக அப்பகுதி முழுவதுமே வெள்ளநீரில் தத்தளிக்கிறது.

இது ஆயிரம் ஆண்டு காணாத கனமழை என்று பருவநிலை கண்காணிப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஹெய்னான் மாநிலத்தின் செங்சாவ் நகரத்தில் ஒரு மணி நேரத்தில் 20 செ.மீ. மழை பெய்து தீர்த்தது.

வெள்ளநீரில் பல கார்கள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. செங்சாவ் நகரத்தின் சுரங்க ரயில் பாதைக்குள் வெள்ளநீர் புகுந்தது. எனவே அந்த ரயில் பாதையில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

அப்போது சுரங்கப் பாதைக்குள் இருந்த ரயிலுக்குள் நீர் புகுந்ததையடுத்து, பயணிகள் இடுப்பளவு நீரில் தத்தளித்தனர். இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதற்கிடையே ஆறுகள் நிரம்பி வழிவதாகவும் யிஹெட்டான் அணையின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டிவிட்டதால், எந்நேரமும் அணை உடையக்கூடும் என்று சீன ராணுவம் எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்