மலேசியாலின் பெராக் மாநிலத்தில் உள்ள ஒரு குகையில் 30 பேர் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குகை அமைந்துள்ள வட்டாரத்தில் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து குகையைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
குகைக்குள் சிக்கியுள்ளவர்கள் படப்பிடிப்புக் குழு என் நம்பப்படுகிறது. அவர்கள் குகைக்குள் படப்பிடிப்பு நடத்திகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.
இந்தக் குகை உள்ளூர்வாசிகளிடையே பிரபலமான சுற்றுலாத் தலம்.
தீ, மீட்புப் பணி அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.


