தாய்லாந்து நாடாளுமன்ற நாயகர் குறித்த சந்திப்பு ஒத்திவைப்பு

தாய்லாந்து நாடாளுமன்ற நாயகர் குறித்த சந்திப்பு ஒத்திவைப்பு

1 mins read
e0842f3e-1ac1-4145-9619-ea7e5a70be14
தாய்லாந்து நாடாளுமன்றம். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தின் அடுத்த நாடாளுமன்ற நாயகரைத் தேர்ந்தெடுப்பது குறித்து நடைபெறவிருந்த சந்திப்பு கால வரம்பின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பு மூவ் ஃபாவர்ட் கட்சிக்கும் (எம்எஃப்பி) ஃபியு தாய் கட்சிக்கும் இடையே புதன்கிழமையன்று நடைபெறவிருந்தது.

நாடாளுமன்ற நாயகர் பொறுப்பைத் தான் ஏற்க உறுதியாக இருப்பதாக ஃபியு தாய் கட்சி கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து அப்பொறுப்பை யார் வகிப்பார் என்பதை முடிவு செய்வதற்கான இச்சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்எஃப்பி, ஃபியு தாய் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். புதன்கிழமையன்று நாடாளுமன்ற நாயகரைத் தேர்ந்தெடுக்க இரு கட்சிகளும் திட்டமிட்டிருந்தன.

எனினும், அதற்கான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எம்எஃப்பி கட்சியின் பேச்சாளர் புக்காமொன் நுனார்னன் செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை நான்கு) அடுத்த நாடாளுமன்ற நாயகருக்கான வாக்கெடுப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்