சிரியா வழியாக ஈரான் ஆயுதங்களை விநியோகிக்கிறது: இஸ்‌ரேல்

1 mins read
664720c8-f617-4174-a2ec-25eb5e770b6e
அக்டோபர் 13ஆம் தேதி டெஹ்ரானில் உள்ள ஈரானியர்கள், பாலஸ்தீன ஆதரவுப் பேரணியில் கலந்துகொண்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: சிரியாவில் அல்லது அதன் மூலமாக ஆயுதம் விநியோகிப்பதன் வாயிலாக ஈரான் இரண்டாவது போர் முனையை உருவாக்க முயல்வதாக இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் சாடியுள்ளார்.

காஸாவில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தும் வேளையில் அவரது கருத்து வெளியாகியிருக்கிறது.

ஈரானியர்கள் அவ்வாறு நடந்துகொள்வதாகக் கூறிய இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சின் உத்திபூர்வ விவகாரங்கள் துறைத் தலைவர் ஜோஷுவா ஸர்கா, இஸ்‌ரேலியர்கள் அதைத் தடுப்பதில் உறுதியாக உள்ளனர் என்றார்.

சென்ற வாரம், டமாஸ்கஸ், அலெப்போ விமான நிலையங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இஸ்ரேலை சிரியா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்