நியூ ஓர்லீன்ஸ் நகரில் மோசமான பனிமூட்டம்: சிலர் மரணம்

நியூ ஓர்லீன்ஸ் நகரில் மோசமான பனிமூட்டம்: சிலர் மரணம்

1 mins read
47a5b50e-e9e0-4671-8002-bea16b7059d6
பனிமூட்டத்தால் நிகழ்ந்த வாகன விபத்துகளில் சிலர் மாண்டனர். - படம்: ஏஎஃப்பி

நியூ ஓர்லீன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஓர்லீன்ஸ் நகரைப் படுமோசமான பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

அதன் காரணமாக திங்கட்கிழமையன்று அந்நகரில் சாலைப் போக்குவரத்துக்குப் பெரிய அளவில் இடையூறு ஏற்பட்டது. பல வாகனங்கள் விபத்துக்கு உள்ளாயின.

வாகன விபத்துகளில் குறைந்தது எழுவர் மாண்டுவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கிட்டத்தட்ட 25 பேர் காயமுற்றதாக அதிகாரிகள் கூறினர். காயமுற்றோரில் சிலர் கவலைக்கிடமாக இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

சுமார் 158 வாகனங்கள் விபத்துக்கு உள்ளாயின.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்