பெய்ஜிங்: பிலிப்பீன்சின் சில கப்பல்கள் சீன கடல் எல்லைக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்து சென்றதையடுத்து வெள்ளிக்கிழமை சீனாவின் கடலோரக் காவல்படை அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் சீனக் கடலில் உள்ள இரண்டாம் தாமஸ் பகுதியில் பிலிப்பீன்சின் இரண்டு சிறு பயணக்கப்பல்களும் மூன்று காவல் கப்பல்களும் நுழைந்ததாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கடலோர சட்டத்தின் படி இரண்டாம் தாமஸ் பகுதியில் உள்ள பகுதி பிலிப்பீன்சுக்கு சொந்தமானது. இருப்பினும் சீனா அதை மறுத்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே சீனாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் தென் சீனக் கடல் தொடர்பாக சில பூசல்கள் நடந்து வருகின்றன.
தற்போது சீனாவின் இந்த எச்சரிக்கை அறிக்கையால் இரு நாடுகளுக்கு இடையே பூசல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.