சீன காவல்துறை அதிகாரிகளை ஈடுபடுத்த தாய்லாந்து திட்டம்; எழுந்தது சர்ச்சை

சீன காவல்துறை அதிகாரிகளை ஈடுபடுத்த தாய்லாந்து திட்டம்; எழுந்தது சர்ச்சை

1 mins read
c43f898e-2a1c-46d6-90f9-9c7ed5d8f95b
தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் இதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தினார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பேங்காக்: சில பிரபலமான சுற்றுலாத்தலங்களில் சீனாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளைப் பணியில் ஈடுபடுத்த தாய்லாந்து திட்டமிட்டுள்ளது.

சீனாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும், இதனால் சர்ச்சை எழுந்துள்ளது. தாய்லாந்தின் சுய ஆட்சி முறை தொடர்பான அம்சங்களில் பிரச்சினைகள் எழக்கூடும் என்ற அச்சம் சில தரப்பினரிடையே உள்ளது.

சீனாவைச் சேர்ந்த காவல்துறையினருடன் இணைந்து செயல்படுவது குறித்து தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் ஞாயிற்றுக்கிழமையன்று மூத்த காவல்துறை அதிகாரிகளுடனும் சுற்றுலாத் துறை அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்கு முன்பு சீனாவிலிருந்துதான் ஆக அதிகமான பயணிகள் தாய்லாந்துக்குச் சென்றனர். அந்த வகையில் சுற்றுலாத் துறையை மீண்டும் பழைய நிலைக்குத் திருப்பும் நோக்கில் ஸ்ரெத்தா முயற்சி எடுத்து வருகிறார்.

சீன காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு தாய்லாந்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதன் மூலம் சீன சுற்றுப்பயணிகளிடையே தாய்லாந்து செல்வது தொடர்பில் நம்பிக்கையை அதிகரிப்பது இலக்கு.

குறிப்புச் சொற்கள்
உலகம்தாய்லாந்துசுற்றுப்பயணிசுற்றுலாசீனா