மருத்துவர்கள், நோயாளிகள் காஸாவின் எஞ்சியுள்ள மருத்துவமனைகளை விட்டு வெளியேறுகிறார்கள்

மருத்துவர்கள், நோயாளிகள் காஸாவின் எஞ்சியுள்ள மருத்துவமனைகளை விட்டு வெளியேறுகிறார்கள்

1 mins read
f4ec3070-2790-4e89-8494-dd2032a6ea6f
காஸாவின் தெற்கு, மத்திய பகுதிகளில் உள்ள மருத்துவமனை சேவைகள் நிலைகுலையக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் செய்வாய்க்கிழமை கவலை தெரிவித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெனீவா: காஸாவின் தெற்கு, மத்திய பகுதிகளில் உள்ள மருத்துவமனை சேவைகள் நிலைகுலையக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் செய்வாய்க்கிழமை கவலை தெரிவித்தது.

அங்கு ஏற்கனவே இருந்த நூற்றுக்கணக்கான மருத்துவ ஊழியர்களும் நோயாளிகளும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

இஸ்ரேலிய தாக்குதல்களை அடுத்து, காஸா வட்டாரத்தில் மூன்றில் ஒரு பங்கு மருத்துவனைகள் மட்டுமே தற்போது செயல்படுகின்றன. அவற்றில் சில பாதியளவுதான் செயல்படுகின்றன.

அல் அக்சா மருத்துவமனை, காஸா ஐரோப்பிய மருத்துவமனை, நாசர் மருத்துவமனை போன்ற எஞ்சியுள்ள மருத்துவமனைகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்